இலங்கையில் 3 நாட்களில் 70 கோடிக்கு மது விற்பனை! - Yarl Voice இலங்கையில் 3 நாட்களில் 70 கோடிக்கு மது விற்பனை! - Yarl Voice

இலங்கையில் 3 நாட்களில் 70 கோடிக்கு மது விற்பனை!
இலங்கையில் கடந்த 3 நாட்களில் 70 கோடி ரூபாவிற்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலுக்குள் அரைவாசிக்கும் குறைவான மதுபானம் விற்பனை நிலையங்கள் திறந்தபோதும் 70 கோடி ரூபாவுக்கு மது விற்பனை இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்து.

கடந்த திங்கட்கிழைமை பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட நிலையில் 3 நாட்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் இவ்வாறு மது விற்பனை இடம்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 200 மதுபான விற்பனை நிலையங்கள் உள்ள போதிலும் கடந்த 21 மற்றும் 22, 23 ஆம் திகதிகளில் 1409 மதுபான விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட 3 நாளில் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களில் 70 கோடிக்கு மதுவிற்பனை இடம்பெற்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post