யாழ். அல்வாய் ஆலயத்தில் விறுமர் கூட்டம் வேள்வி -30 பேர் சுய தனிமைப்படுத்தல் - Yarl Voice யாழ். அல்வாய் ஆலயத்தில் விறுமர் கூட்டம் வேள்வி -30 பேர் சுய தனிமைப்படுத்தல் - Yarl Voice

யாழ். அல்வாய் ஆலயத்தில் விறுமர் கூட்டம் வேள்வி -30 பேர் சுய தனிமைப்படுத்தல்
அல்வாய் விறுமர் ஆலயத்தில் விறுமர் பக்தர்கள் என்ற போர்வையில் வேள்வி நடத்தி இறைச்சி வியாபாரம் செய்ய முற்பட்ட ஆலய நிர்வாகத்தின் மீது பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் இறைச்சி வாங்குவதற்கும் விடுப்பு பார்க்கம் சென்ற 30 இற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் இன்று  வியாழக்கிழமை  அல்வாய் வடக்கு விறுமர் கோயிலில் நடைபெற்றது. 
குறித்த கோயிலில் வேள்வி விழா என்ற போர்வையில்  முன்னறிவித்தலன்றி கொவிட் கட்டுப்பாடுகளை மீறி, முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளிகளைப் பேணாது நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

கொவிட் கட்டுப்பாடுகளை மீறி கொரோனா பரவலை ஏற்படுத்தும் வகையில் வேள்வி நடைபெறுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

இதனையடுத்து பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார பிரிவினர் மற்றும் பருத்தித்துறை பொலீஸார் குறித்த இடத்திற்கு விஜயம் செய்த போது பலர் கொவிட் கட்டுப்பாடுகளை மீறி பங்கு பற்றியமை தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து கோயில் நிர்வாகி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 30 இற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post