ஜனாதிபதி நேற்று 69 நிமிடங்கள் உரையாற்றியபோதிலும் மக்களின் பிரச்சினைகளிற்கு எந்த தீர்வையும் முன்வைக்கவில்லை மக்களிற்கு எந்த நிவாரணத்தையும் அறிவிக்கவில்லை என எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பொதுமக்கள் பல விடயங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் ஜனாதிபதி தங்கள் பிரச்சினைகளிற்கு தீர்வை முன்வைப்பார் என எதிர்பார்த்தனர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் ஜனாதிபதி அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பார் என எதிர்பார்த்தனர்,தடுப்பூசி பிரச்சினைகளிற்கு தீர்வை வழங்குவார் என எதிர்பார்த்தனர், என தெரிவித்துள்ள அவர் மக்கள் ஜனாதிபதி எரிபொருட்களி;ன் விலைகளை குறைப்பார் உரங்களை விநியோகிப்பது தொடர்பான திட்டமொன்றை முன்வைப்பார் எனவும் எதிர்பார்த்தனர் என தெரிவித்துள்ளார்.
எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எழுந்த பாதுகாப்பு கரிசனைகள் குறித்தே ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார், புலனாய்வு பிரிவினர் பலப்படுத்தப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ள போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் பூர்த்தியாகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment