வடக்கின் 7 கல்வி வலயங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம் - Yarl Voice வடக்கின் 7 கல்வி வலயங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம் - Yarl Voice

வடக்கின் 7 கல்வி வலயங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்
வடக்கு மாகாணத்தின் 7 கல்வி வலயங்களுக்கு புதிய கல்
விப் பணிப்பாளர்கள் நியமனம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சில வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஓய்வுபெற்றுச் சென்றதாலும் மேலும் சிலர் இடமாற்றம் பெற்றுச் சென்றதாலும் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்
பும் வகையில் கோரப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில்
இந்த நியமனங்கள் வழங்கப் பட்டுள்ளன.

இதற்கமைய வலிகாமம் கல்வி வலயத்துக்கு பொ.இரவிச்
சந்திரனும், தீவக கல்வி வலயத்துக்கு தி.ஞானசுந்தரமும்,
வடமராட்சி கல்வி வலயத்துக்கு எஸ்.சத்தியபாலனும், மடு கல்வி
வலயத்துக்கு எம்.முகுந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று முல்லைத்தீவு கல்வி வலயத்துக்கு ரி.தமிழ்மாறனும், மன்னார் கல்வி வலயத்துக்கு திருமதி தயாளினியும், வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்கு  எல்.லெனி
னும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post