போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - Yarl Voice போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - Yarl Voice

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
நாளை போக்குவரத்து கட்டு;ப்பாடுகள் நீக்கப்படும் போது பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என  பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மிகவும் வேகமாக பரவக்கூடிய டெல்டா வைரஸ் காணப்படுவதால் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை இறுக்கமாக  பின்பற்றவேண்டும் என பொதுசுகாதார பரிசோதகர் சங்க தலைவர் உபுல்ரோகண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர் முடக்கல் காரணமாக பொதுமக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மூன்றுநாட்களிற்கு நாட்டை திறப்பது கரிசனைக்குரிய விடயமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்கு பொதுமக்கள் உதவவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் பொதுமக்களின் பழக்க வழக்கங்களே நாட்டின் எதிர்காலத்தினையும் பொருளாதாரத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post