மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் பேருந்துகளும் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடும் - இராஜாங்க அமைச்சர் - Yarl Voice மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் பேருந்துகளும் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடும் - இராஜாங்க அமைச்சர் - Yarl Voice

மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் பேருந்துகளும் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடும் - இராஜாங்க அமைச்சர்
நாளை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பேருந்துகளையும் புகையிரதங்களையும் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அத்தியாவசிய தேவைகளிற்காக மாத்திரம் பொதுமக்களை அவற்றை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் போக்குவரத்து சேவைகளை  ஆரம்பிப்பதற்கான  ஏற்பாடுகளை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாளை காலை நான்கு மணிமுதல் புதன்கிழமை இரவுபத்துமணி முதல் மாகாணங்களிற்குள் பேருந்துகளையும் புகையிரதங்களையும் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளிற்கும் மருந்தகங்களிற்கும் செல்வதற்கும்  அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தைகளிற்கு செல்வதற்கும் பொதுபோக்குவரத்து சேவைகளை பயன்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post