ஒலிம்பிக் மற்றும் விம்பிள்டன் போட்டியிலிருந்து விலகும் ரபால் நாடார் ! ருவிட்டரில் முடிவை அறிவித்தார் - Yarl Voice ஒலிம்பிக் மற்றும் விம்பிள்டன் போட்டியிலிருந்து விலகும் ரபால் நாடார் ! ருவிட்டரில் முடிவை அறிவித்தார் - Yarl Voice

ஒலிம்பிக் மற்றும் விம்பிள்டன் போட்டியிலிருந்து விலகும் ரபால் நாடார் ! ருவிட்டரில் முடிவை அறிவித்தார்25 கிராம் ஸலாம் பட்டங்களை வென்ற உலகப் புகழ்பெற்ற டெனிஸ் வீரர் ரபால் நாடால் இந்த வருட விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்த வெளியேறுவதாக அறிவித்துள்ளார். தனது அணியினரை கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். 

நான் என்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு, எனது குழுவினருடன் கலந்துரையாடி  இந்த வருட விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன். இது சரியான முடிவு என நான்  விளங்கியுள்ளேன் என தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார். 

35 வயதான ஸ்பெயின் வீரரான நடால் இந்த மாத ஆரம்ப பகுதியில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் வெற்றியாளர் நோவாக் டிஜோகோவிக்க்கால் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

0/Post a Comment/Comments

Previous Post Next Post