ஸ்டைலா சிம்பிளா அமெரிக்காவில் ரஜினிகாந்த் - வைரலாகும் படம்! - Yarl Voice ஸ்டைலா சிம்பிளா அமெரிக்காவில் ரஜினிகாந்த் - வைரலாகும் படம்! - Yarl Voice

ஸ்டைலா சிம்பிளா அமெரிக்காவில் ரஜினிகாந்த் - வைரலாகும் படம்!அமெரிக்காவில் ஐஸ்வர்யா தனுஷுடன், மேயோ க்ளினிக்கில் இருந்து ரஜினி நடந்து வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார்.

 அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இருப்பினும் அவாப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்வார்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார் ரஜினி. சிகிச்சையுடன் சிறிது நாட்கள் ஓய்வெடுத்து விட்டு சென்னை திரும்பும் அவர், அதன் பிறகு அண்ணாத்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.

 இந்நிலையில் அமெரிக்காவில் ஐஸ்வர்யா தனுஷுடன், மேயோ க்ளினிக்கில் இருந்து ரஜினி நடந்து வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தவிர தற்போது ’அண்ணாத்த’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. சிவா இயக்கி வரும் இந்தப் படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post