திடீரென மீடூ பற்றி ஓவியா போட்ட ட்வீட்.. அது என்ன பசங்களுக்கு மட்டும் என பொங்கும் நெட்டிசன்ஸ்! - Yarl Voice திடீரென மீடூ பற்றி ஓவியா போட்ட ட்வீட்.. அது என்ன பசங்களுக்கு மட்டும் என பொங்கும் நெட்டிசன்ஸ்! - Yarl Voice

திடீரென மீடூ பற்றி ஓவியா போட்ட ட்வீட்.. அது என்ன பசங்களுக்கு மட்டும் என பொங்கும் நெட்டிசன்ஸ்!
 நடிகை ஓவியா. அடிக்கடி ட்விட்டரில் போல்டாக கருத்துக்களை பதிவிட்டு ஓவியா ஆர்மியை பிக் பாஸ் 4வது சீசன் முடிந்த பிறகும் உயிர்ப்புடன் வைக்க முயற்சித்து வருகிறார். 

 இந்நிலையில், தற்போது மீடூ பற்றி நடிகை ஓவியா போட்டுள்ள பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன. 

மகன்களுக்கு சொல்லிக் கொடுங்க 

உங்கள் மகள்களுக்கு தற்காப்பு கலை மற்றும் #metoo பற்றி சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக உங்கள் மகன்களுக்கு கண்ணியத்தையும் பெண்களை மதிக்கவும் கற்றுக் கொடுங்க என நடிகை ஓவியா திடீரென போட்டுள்ள ட்வீட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

சரியா சொன்னீங்க 
நடிகை ஓவியாவின் இந்த ட்வீட்டை பார்த்தவுடன் ஸ்லீப்பர் செல்களாக இருந்த ஓவியா ஆர்மியினர் ஓடோடி வந்து தலைவி சரியா சொன்னீங்க என ஓவியாவின் போட்டோக்களை பதிவிட்டு கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். 

ரொம்ப தப்பு 
நடிகை ஓவியாவின் கருத்து ஒரு சார்பாக இருப்பதாகவும், அதற்கு பதில் இப்படி நீங்க ட்வீட் போட்டிருக்கலாம் என "அனைவரையும் மதிக்க உங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள்" என சில ரசிகர்கள் ஓவியாவின் கருத்துக்கு எதிரான பதிவுகளை போட்டுள்ளனர். 
அப்படி போடாதீங்க 

நடிகை ஓவியா பயன்படுத்திய ‘Instead' வார்த்தைக்கு எதிராக பல நெட்டிசன்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைத்து பசங்களும் கெட்டவர்கள் இல்லை. அதே போல அனைத்து பெண்களும் நல்லவர்களும் இல்லை. 

இருவருக்கும் சரி சமமாகவே ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது என ஓவியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். 

 பிக் பாஸ் முதல் சீசன் மூலமாக கெத்துக் காட்டிய ஓவியா அதற்கு பிறகு படங்களில் பெரிதாக வெற்றியடையவில்லை.

 மேலும், அடிக்கடி ஆன்லைனிலும் வந்து புதிய போட்டோக்களையும் ரசிகர்களுக்காக வெளியிடுவதில்லை.

 வெறும் ட்வீட்களை மட்டுமே போட்டு வருவதால் ஓவியா ஆர்மியினரும் அப்செட்டில் உள்ளனர். 

வாய்ப்பில்லை ஓவியா "எவ்வளவு முக்குனாலும் ஒரு பட சான்ஸ் கூட கிடைக்கமாட்டேங்குது" என நடிகை ஓவியா திடீர் போராளியாக மாறி வருவதை ஏகப்பட்ட நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர். சமீபத்தில் #GobackModi என ஓவியா போட்ட ட்வீட்டுக்கும் ஆதரவும் எதிர்ப்புகளும் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

 90ml மாதிரி "90ml மாதிரி இன்னும் 4 படம் நடி அருமையா இருக்கும்..." என நடிகை ஓவியாவை வச்சு விளாசி வருகின்றனர் நெட்டிசன்ஸ். 

ஏற்கனவே பல பேர் இந்த கருத்தை சொல்லிட்டாங்க.. எல்லாருக்கும் குழந்தைகளை எப்படி வளர்க்கணும்னு தெரியும் நீங்க முதல்ல நல்ல படமா நடிக்கிற வேலையை பாருங்க என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post