யாழ் பல்கலை பணியாளர்களுக்கு தடுப்பூசி - Yarl Voice யாழ் பல்கலை பணியாளர்களுக்கு தடுப்பூசி - Yarl Voice

யாழ் பல்கலை பணியாளர்களுக்கு தடுப்பூசியாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினம் செலுத்தப்பட்டு வருகிறது.

முதலாவது தடுப்பூசி பல்கலைக்கழக துணைவேந்தர் சீறீசற்குணராஜாவுக்கு செலுத்தப்பட்டது.

பல்கலைக்கழக பணியாளர்கள் ,விரிவுரையாளர்கள்,உத்தியோகத்தர்கள் ஆர்வமாக சினோபாம் தடுப்பூசிகளை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் விசேட அனுமதிக்கமைய பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் கண்காணிப்பில் இன்று காலை 9 மணி முதல் சினோபாம் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது .தடுப்பூசி போடும் செயன்முறை நாளையதினமும் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post