நாளையுடன் தடுப்பூசி செலுத்தி முடிக்கலாம் என எதிர்பார்ப்பு - வடக்கு சுகாதார பணிப்பாளர் - Yarl Voice நாளையுடன் தடுப்பூசி செலுத்தி முடிக்கலாம் என எதிர்பார்ப்பு - வடக்கு சுகாதார பணிப்பாளர் - Yarl Voice

நாளையுடன் தடுப்பூசி செலுத்தி முடிக்கலாம் என எதிர்பார்ப்பு - வடக்கு சுகாதார பணிப்பாளர்நாளையுடன் 50,000 சினோபாம் கொரோனா தடுப்பூசிகளும் முழுமையாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கின்றோமென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தடுப்பூசி போடும் நிகழ்வை கண்காணிப்பதற்காக அங்கு வருகை தந்த வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார் 

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன் யாழ் மாவட்டத்திற்கு 50,000 சினோபாம் தடுப்பூசி கிடைக்கப்பெற்றது. இது நாளையுடன் முழுமையாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கின்றோம் .இதுவரை தடுப்பூசி போட்ட யாருக்கும் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை. ஆகவே தயங்காது அச்சப்படாது பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்த வேண்டும். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கல்வி சார்ந்த சாராத ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

 மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் எமக்கு விசேட பணிப்புரை வழங்கப்பட்டது. அந்த அறிவித்தலின் பிரகாரம் தடுப்பூசி போடும் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.இதில் பல்கலைக் கழக பணியாளர்களுக்கு தடுப்பு ஊசியை  பெற்றுவருகின்றனர்
என தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post