யாழ். பல்கலைக்கழகத்தில் இந்த வருடம் முதல் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம் ! - Yarl Voice யாழ். பல்கலைக்கழகத்தில் இந்த வருடம் முதல் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம் ! - Yarl Voice

யாழ். பல்கலைக்கழகத்தில் இந்த வருடம் முதல் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம் !
யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில்  சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 


2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது. 


இவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி, திங்கட்கிழமை இணைய வழி வாயிலாக நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. 2019/2020 ஆம் கல்வியாண்டுக்குத் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்த மாணவர்கள் www.maco.jfn.ac.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் அறிவித்துள்ளார். 


0/Post a Comment/Comments

Previous Post Next Post