இந்திய வைரஸ் ஏனைய மாவட்டங்களிற்கு பரவும் ஆபத்துள்ளது- பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - Yarl Voice இந்திய வைரஸ் ஏனைய மாவட்டங்களிற்கு பரவும் ஆபத்துள்ளது- பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - Yarl Voice

இந்திய வைரஸ் ஏனைய மாவட்டங்களிற்கு பரவும் ஆபத்துள்ளது- பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
இந்திய வைரஸ் ஏனைய மாவட்டங்களுக்கு பரவும் ஆபத்துள்ளது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.

தெமட்டகொட 66வத்த என்ற பகுதியிலேயே இந்திய வைரசினால் பாதிக்கப்பட்டவர் அடையாளம் காணப் பட்டுள்ளார் என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகாண தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் அதிகளவு மக்கள் வாழ்கின்றனர். அங்கு அடிப்படை வசதிகள் குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.
66வத்தையிலிருந்து 140 குடும்பங்களைைச் சேர்ந்த 900 பேர் வசிக்கின்றனர். அவர்களில் பலர் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த பலர் முச்சக்கரவண்டிச் சாரதிகள். இவர்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில் இந்திய வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post