துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதால் எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது- ஹிருணிகா - Yarl Voice துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதால் எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது- ஹிருணிகா - Yarl Voice

துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதால் எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது- ஹிருணிகாதுமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதன் காரணமாக தனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

தனது தந்தையின் கொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக நானும் எனது குடும்பத்தவர்களும் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டோம் என ஹிருணிகா பிசிசிக்கு தெரிவித்துள்ளார்.

தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக நாங்கள் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டோம்,ஆனால் ஜனாதிபதி தற்போது அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார்-

 மக்கள் நீதித்துறையை எப்படி நம்பமுடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.நாங்கள் எங்கள் பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளோம்  என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் நாங்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றோம் என பிபிசிக்கு தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி எங்களை நரகத்தை நோக்கி அழைத்துச்செல்கின்றார் என தெரிவித்து நான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன் எனவும் அவர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post