கட்டடத் தொழிலாளி தவறி வீழ்ந்து மரணம் - Yarl Voice கட்டடத் தொழிலாளி தவறி வீழ்ந்து மரணம் - Yarl Voice

கட்டடத் தொழிலாளி தவறி வீழ்ந்து மரணம்
கட்டட வேலையில் ஈடுபட்ட போது தவறி வீழ்ந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நீர்வேலியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36) என்ற  ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

கட்டடத்தின் மேல் தளத்தில் சன்செட்டுக்கு தூண் போடும் பொழுது தவறி கீழே வீழ்ந்த அவர் மயங்கியுள்ளார்.

உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் ஏற்கனவே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post