நெடுந்தீவில் பொருட்களை பெறமுடியாது மக்கள் அவதி -பயண கட்டுப்பாடு தொடர்ந்தால் அபாயம்- - Yarl Voice நெடுந்தீவில் பொருட்களை பெறமுடியாது மக்கள் அவதி -பயண கட்டுப்பாடு தொடர்ந்தால் அபாயம்- - Yarl Voice

நெடுந்தீவில் பொருட்களை பெறமுடியாது மக்கள் அவதி -பயண கட்டுப்பாடு தொடர்ந்தால் அபாயம்-




தற்போதய பயண நெருக்கடியில் நெடுந்தீவில் மீன் வகைகள் உட்பட மரக்கறி மற்றும் பொருட்களை பெறுவதில் மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர்.

சுகல பொருட்களும் யாழ். குடாநாட்டிலிருந்தே கொண்டு செல்ல வேண்டிய நிலையில் பயணக் கட்டுப்பாட்டுக்குள் பொருட்களை கொண்டு செல்வதில் சிரமங்கள் காணப்படுவதோடு யாழில் மரக்கறி வகை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் அவற்றை கொண்டு சென்று விற்பனை செய்வதிலும் பாரிய சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.

இதேவேளை கடலுணவுகள் நெடுந்தீவில மக்களுக்கு போதுமான அளவில் இருக்கின்ற போதும் அவையனைத்தும் கொம்பனிகளால் கொள்வனவு செய்யப்பட்டு குளிருட்டிகளில் போடப்பட்டு வெளியிடங்களுக்குனு கொண்டு செல்வதற்கான சேமிக்கப்படுவதால் மக்களுக்கான கடலுணவுகளை பெறுவதில் பாரிய நெருக்கடி காணப்படுகின்றது.

அன்றாடம் தொழில் செய்து வாழும் இத்தீவின் மக்கள் தற்போது தொழில்களை இழந்த நிலையில் அரசினால் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் கூட போசாக்கான உணவுகளை பெறமுடியாத நிலையே தொடர்கிறது.

அதிகாரிகள் இவற்றுக் தீர்வு காண முன்வருவார்களா? என்பதே நெடுந்தீவு மக்களின் கோரிக்கையாக காணப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post