கிளிநொச்சியில் பயணத் தடையால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விக்னேஸ்வரன் - Yarl Voice கிளிநொச்சியில் பயணத் தடையால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விக்னேஸ்வரன் - Yarl Voice

கிளிநொச்சியில் பயணத் தடையால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விக்னேஸ்வரன்நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று (15-06-2021) காலை 11 மணி தொடக்கம் பாரதிபுரம், மலையாளபுரம், கோணாவில் கிழக்கு, செல்வாநகர், திருவையாறு, பரந்தன், பிரமந்தனாறு, கல்லாறு, சாந்தபுரம், அம்பாள் குளம் ஆகிய கிளிநொச்சி மாவட்டத்தில் பயணத் தடையால் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த அடையாளப்படுத்தப்பட்ட உதவி தேவைப்படுவோர்க்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் இணைந்து தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான பொருட்களை வழங்கி வைத்தனர்.

குறித்த வாழ்வாதார உதவிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்  அவர்கள் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கியதுடன், சிட்னி தமிழ் உறவுகள் சிலரும்  நிதிப் பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post