மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்லைன் மூலம் மதுபான விற்பனை? - Yarl Voice மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்லைன் மூலம் மதுபான விற்பனை? - Yarl Voice

மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்லைன் மூலம் மதுபான விற்பனை?ஒன்லைன் விநியோக சேவை மூலம் மதுபானம் விற்பதற்கான திட்டம் நிதி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படுமென கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒரு முன்னோடித் திட்டமாக நிதி அமைச்சின் அனுமதி பெற்ற பின்னர் பொது மக்கள், பல்பொருள் அங்காடிகளிலில் இருந்து ஒன்லைனில் பொருட்கள் வாங்குவதை போல மதுபானங்களையும் வாங்க முடியும்.

பயணத்தடைகள் காரணமாக தற்போது மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒன்லைனில் மதுபானம் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குமாறு அதிகமான நுகர்வோர் கலால் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டமையினால் சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துள்ளது. சட்டவிரோத மதுபானங்களை அதிக விலைக்கு விற்பதும் அதிகரித்துள்ளது.
பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் ஒன்லைன் முறை மூலம் மதுபான வியாபாரத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பினை கோரியுள்ளனர்.

எனினும் ஒன்லைன் மதுபான விற்பனைக்கு நிதி அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் இன்னும் இத்திட்டம் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post