தோனியை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக்கி அழகு பார்த்திருப்பேன் : பாகிஸ்தான் முன்னாள் வீரர் விருப்பம் - Yarl Voice தோனியை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக்கி அழகு பார்த்திருப்பேன் : பாகிஸ்தான் முன்னாள் வீரர் விருப்பம் - Yarl Voice

தோனியை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக்கி அழகு பார்த்திருப்பேன் : பாகிஸ்தான் முன்னாள் வீரர் விருப்பம்




தற்போதைய பாகிஸ்தான் அணி திறமையானது, ஆனால் தோனி போன்ற கேப்டன் தான் இவர்களுக்கு ஊக்கமளிக்க முடியும் என்று நினைக்கிறார் யாசிர் அராபத்

எம்.எஸ். தோனி இப்போது விளையாடவில்லை. அவர் மட்டும் ஓய்வு பெறாமல் இருந்திருந்தால் நான் அவரை பாகிஸ்தன் அணிக்கு கேப்டனாகத் தேர்வு செய்திருப்பேன். 

இப்போதைய பாகிஸ்தான் அணிக்கு தோனி போன்ற ஒரு கேப்டன் தேவை. அவருக்கு மேன் மேனேஜ்மெண்ட் நன்றாகத் தெரியும். எங்கள் வீரர்கள் திறமைசாலிகள்தான் ஆனால் இவர்களுக்குத் தேவை தோனி போன்ற ஒரு திறமைப் படைத்த கேப்டன்.

ஷோயப் அக்தர் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கலாம், அவர் தோனிக்குப் பவுலிங் செய்யும் போதெல்லாம் அவரை எப்படி பீட் செய்வது என்பது தனக்குத் தெரியாது என்று கூறுவார், தோனி உடல் ரீதியாக மன ரீதியாக வலுவானவர் என்பார் அக்தர். 

90களில் தோனிக்கு முன்பாக மைக்கேல் பெவன் பினிஷராக இருந்தார். அவரது ஒருநாள் போட்டி சராசரி 50க்கும் மேல். நடப்பு வீரர்களில் பினிஷிங்கில் தோனிக்கு அருகில் கூட எந்த வீரரும் வர முடியாது” இவ்வாறு கூறினார் யாசிர் அராபத்

0/Post a Comment/Comments

Previous Post Next Post