யாழிலுள்ள ஜனாதிபதி மாளிகை சீன வசமா ? அனுமதிக்க முடியாது என்கிறார் சுமந்திரன் - Yarl Voice யாழிலுள்ள ஜனாதிபதி மாளிகை சீன வசமா ? அனுமதிக்க முடியாது என்கிறார் சுமந்திரன் - Yarl Voice

யாழிலுள்ள ஜனாதிபதி மாளிகை சீன வசமா ? அனுமதிக்க முடியாது என்கிறார் சுமந்திரன்




யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ராஜபக்ச மாளிகையை சீன நிறுவனத்திற்கு வழங்க இணங்கமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் . 

முடக்க நிலையில் உள்ள யாழ்.நல்லூர் அரசடி கிராமத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கிய பின் , ஊடகங்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோதே ராஜபக்ச மாளிகை தொடர்பில் கூறினார் .

கீரிமலை ராஜபக்ச மாளிகை என நாங்கள் அறிந்துகொண்டிருக்கின்ற , இந்த இடமும் விற்பனைக்கு விடப்படுவதாக சொல்லப்படுகின்றது . இது நாட்டை விற்கிற அவர்களுடைய இன்றைய திசையிலே இதுவும் ஒரு பகுதி. 

ஆனால் எங்களைப் பொறுத்தவரையிலே இந்தக் கட்டடம் அமைக்கப்பட்ட போதே பல தனியார் காணிகள் இருந்த இடம் . அது விடுவிக்கப்படவில்லை . 

சுவிகரிக்கப்பட்ட காணிகளை விடுக்குமாறு வழக்குகளும் நடைபெறுகின்றன . மைதிரிபால சிறிசேன ராஜபக்ச மாளிகை மத்திய அரசுக்கு தேவையில்லை என கூறினார் .

மைதிரிபால அவ்வாறு கூறியபோது , முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபைக்கு வழங்குமாறு கோரினார் . வடக்கு மாகாண சபையில் இம்மாளிகையை மாகாண சபைக்கு வழங்குமாறு தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டுள்ளது .

 இப்படியான நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது " என்றார் .

0/Post a Comment/Comments

Previous Post Next Post