இன்றும் நாளையும் விசேட தேடுதல்! பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு - Yarl Voice இன்றும் நாளையும் விசேட தேடுதல்! பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு - Yarl Voice

இன்றும் நாளையும் விசேட தேடுதல்! பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுபவர்களை அடையாளம் காணுவதற்காக இன்றும் நாளையும் விசேட கண்காணிப்பு நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி , இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

இதற்கமைய , இன்றும் , நாளையும் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலை பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காலப்பகுதியில் விருந்துபசாரங்கள் , கொண்டாட்டங்கள் மற்றும் மக்கள் ஒன்றுக் கூடல்களில் ஈடுபடக்கூடாது.

மேலும் .அவ்வாறு எவறேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post