அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் வரை நான் தடுப்பூசியை பயன்படுத்தமாட்டேன் - சஜித் - Yarl Voice அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் வரை நான் தடுப்பூசியை பயன்படுத்தமாட்டேன் - சஜித் - Yarl Voice

அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் வரை நான் தடுப்பூசியை பயன்படுத்தமாட்டேன் - சஜித்
நாட்டின் முழு சனத்தொகைக்கும் தடுப்பூசி வழங்கப்படும் வரை நான்  கொரோனா வைரஸ்தடுப்பூசியை  பயன்படுத்த மாட்டேன் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நான் தடுப்பூசியை பயன்படுத்த மறுத்தமையினாலேயே எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ள சஜித்பிரேமதாச எனினும் முழுசனத்தொகைக்கும் தடுப்பூசி கிடைக்கும்வரை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளப்போவதில்லை  என்ற  நிலைப்பாடு தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஆபத்தினை தவிர்ப்பதற்காக நாங்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவோம் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள பெரும்பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது,அவர்கள் உணவுகளை பெறமுடியாத நிலையில் உள்ளனர் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post