விக்கெட்களை காலால் உதைத்து பிடுங்கியெறிந்த ஷாகிப் அல் ஹசன் - Yarl Voice விக்கெட்களை காலால் உதைத்து பிடுங்கியெறிந்த ஷாகிப் அல் ஹசன் - Yarl Voice

விக்கெட்களை காலால் உதைத்து பிடுங்கியெறிந்த ஷாகிப் அல் ஹசன்பங்களாதேசின் டாக்கா பீரிமியர் லீக் போட்டியில் பங்களாதேஸ் அணியின்  ஷாகிப் அல் ஹசன்விக்கெட்களை காலால் தட்டி வீழ்த்தியதுடன் விக்கெட்களை பிடுங்கி எடுத்து மைதானத்தில் வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகமடான் ஸ்போர்ட்டிங் கிளப்பிற்கு தலைமை தாங்கும் ஷாகிப் அல் ஹசன்  அப்ஹானி லிமிடெட் அணிக்கு எதிரான போட்டியின் போது இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.

முஸ்பிகூர் ரஹீமிற்கு எதிரான ஆட்டமிழப்பிற்கு இவர் அப்பீல் செய்தவேளை நடுவர் அதனை மறுத்ததை தொடர்ந்து  ஷாகிப் அல் ஹசன்முதலில விக்கெட்களை காலால் உதைத்துள்ளார்.

இதன் பின்னர்ஆறாவது ஓவரிற்கு ஒருபந்து இருந்தவேளை மழை காரணமாக ஆட்டத்தை இடைநிறுத்த நடுவர்கள் தீர்மானித்தவேளை அவர் விக்கெட்டினை பிடுங்கி எறிந்துள்ளார்.

இதேவேளை எதிரணியின் பயிற்றுவிப்பாளரும் பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் இயக்குநருமான காலிட் மஹ்மூட்டுடன் அவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post