பயணத்தடைக்குள் நெடுந்தீவிலிருந்து மாடு, ஆடு இறைச்சியாக்கி கடத்தியோர் புங்குடுதீவில் கடற்படையிடம் சிக்கினர் - Yarl Voice பயணத்தடைக்குள் நெடுந்தீவிலிருந்து மாடு, ஆடு இறைச்சியாக்கி கடத்தியோர் புங்குடுதீவில் கடற்படையிடம் சிக்கினர் - Yarl Voice

பயணத்தடைக்குள் நெடுந்தீவிலிருந்து மாடு, ஆடு இறைச்சியாக்கி கடத்தியோர் புங்குடுதீவில் கடற்படையிடம் சிக்கினர்
பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் நெடுந்தீவிலிருந்து ஆடு மற்றும் மாட்டினை இறைச்சியாக்கி புங்குடுதீவு ஊடாக கடத்த முற்பட்டவர்கள் கடற்படையிடம் வசமாக சிக்கினர்.

புங்குடுதீவிலிருந்து லொறியில் இறைச்சியை கடத்தி சென்ற சமயம் இவர்கள் பிடிக்க்பட்டதுடன்  செல்லப்பட்ட  மாடு மற்றும் ஆட்டிறைச்சி கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

நேற்று அதிகாலை நெடுந்தீவில் இருந்து மீன்பிடி படகு மூலம் இறைச்சி புங்குடுதீவுக்கு வரப்பட்டுள்ளது. 

பின்னர் லொறி ஒன்றில் ஏற்றப்பட்டு புங்குடுதீவு ஊடக எடுத்துச்செல்ல முற்பட்ட போது நிலையில் கடற்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

குறித்த லொறி மடத்துவெளிப்பகுதியில் வழி மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது வாகனத்தில் ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகள் பெட்டிகளில் மறைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டன.

வாகனசாரதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் நெடுந்தீவில் இருந்து இறைச்சி கடத்தப்பட்ட படக மற்றும் நெடுந்தீவு பகுதியில் மாடு மற்றும் ஆடுகளை இறைச்சியாக்கியவர்கள் யார் என்ற விசாரணைகள் தொடர்கின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post