மகன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தாயார் மரணம்!-மட்டக்களப்பு சோகம்- - Yarl Voice மகன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தாயார் மரணம்!-மட்டக்களப்பு சோகம்- - Yarl Voice

மகன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தாயார் மரணம்!-மட்டக்களப்பு சோகம்-
மகன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாயார் சில மணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இச் சம்பவம் இன்று மட்டக்களப்பு ஏறாவூர்  ஐயங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றது.
.
புதூர் பிரதேசத்தைச் சேர்ந்த  ஞானப்பிரகாசம் மைக்கல் (வயது-46) அவரின் தாயாரான  ஞானப்பிரகாசம் பாக்கியம் (வயது-70) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டவர் புதூர் பிரதேசத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மனைவியுடன் சண்டையிட்டு தாயார் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில்  இன்று முற்பகல் 11 மணி அளவில் மகனை காணவில்லை என தாயார் தேடியுள்ளார்.

இதன்போது வீட்டின் அறைக்கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் உறவினர்களின் உதவியுடன் அறைக்கதவை உடைத்து  பார்த்த போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தாயாருக்கு சில மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவரும் உயிரிழந்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post