போயும் போயும் இங்கிலாந்திலா முக்கிய இறுதிப் போட்டியை வைப்பது? - பீட்டர்சன் சாடல் - Yarl Voice போயும் போயும் இங்கிலாந்திலா முக்கிய இறுதிப் போட்டியை வைப்பது? - பீட்டர்சன் சாடல் - Yarl Voice

போயும் போயும் இங்கிலாந்திலா முக்கிய இறுதிப் போட்டியை வைப்பது? - பீட்டர்சன் சாடல்



முக்கியமான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைக் கொண்டு போய் இங்கிலாந்திலா வைப்பது, இங்கு வைத்திருக்கக் கூடாது என்கிறார் கெவின் பீட்டர்சன்

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஆட்டமே விறுவிறுப்பு இழந்து, சோபையிழந்து அறுவையான டிரா நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது

இப்படி டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி ஆட்டமே நடக்காமல் கைவிடப்படுவதன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 101-2 என்று உள்ளது, வில்லியம்சன், ராஸ் டெய்லர் களத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஒரு நல்ல போட்டி, அதுவும் ஒரே போட்டி, அதுவும் இறுதிப் போட்டி எனும்போது அதைக் கொண்டு போய் இங்கிலாந்திலா வைப்பது? இனி இங்கிலாந்தில் முக்கியமான போட்டிகளை வைக்கக் கூடாது என்று கெவின் பீட்டர்சன் தாக்கியுள்ளார்.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் “தொடர்ந்து திங்கட்கிழமை அன்று நான்காம் நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. 

இது குறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் இங்கிலாந்து அணி வீரர் கெவின் பீட்டர்சன், "இதைச் சொல்வதற்கு எனக்குக் கடினமாக இருக்கிறது. ஆனால், இப்படி மிக முக்கியமான கிரிக்கெட் போட்டி, அதுவும் ஒரே ஒரு போட்டிதான் என்று திட்டமிடும்போது அதை பிரிட்டனில் விளையாடக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் முதலில் லார்ட்ஸில்தான் நடைபெறுவதாக இருந்தது, ஆனால் கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக அங்கு சிலபல நடைமுறைச்சிக்கல்கள் இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஐசிசியும் கலந்தாலோசனையில் முடிவுக்கு வர, ஐசிசி பிறகு மான்செஸ்டர் ஓல்ட் டிராபர்ட் மைதானம் அல்லது எட்ஜ்பாஸ்டனில் நடத்தலாம் என்று பரிசீலனை செய்தது.

கடைசியில் சவுத்தாம்ப்டனை தேர்வு செய்து அங்கு இப்படி மழை தன் வேலையைக் காட்டி கிரிக்கெட் போட்டியை நடக்க விடாமல் செய்துள்ளது.

இதனையடுத்து பலதரப்பிலிருந்தும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன

0/Post a Comment/Comments

Previous Post Next Post