முதலாவது அலை தந்தையை பறித்தது - இரண்டாவது அலை தாயை பறித்தது - Yarl Voice முதலாவது அலை தந்தையை பறித்தது - இரண்டாவது அலை தாயை பறித்தது - Yarl Voice

முதலாவது அலை தந்தையை பறித்தது - இரண்டாவது அலை தாயை பறித்ததுகொரோனா காரணமாக பெற்றோர்கள் இருவரும் உயிரிழந்ததை தொடர்ந்து 13 ஹிமான்சு மலி;க் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் குடும்ப பாரத்தை சுமக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.

புதுடில்லியின் வடபகுதியில் உள்ள கிராமமொன்றை சேர்ந்த ஹிமான்சுமலிக் 12வயது சகோதரியையும் 11 வயது சகோதரனையும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். தனது சகோதாரங்களை பராமரிப்பதுடன் தானும் வேலை பார்த்தவாறு தனது கல்வியை தொடர முயல்கின்றான்.

தனது வயதிற்கு மிஞ்சிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டிய நிலையில் ஹிமான்சு காணப்படுகின்றான்.
நான் எனது சகோதரங்களின் கல்வி குறித்து கவலையடைந்துள்ளேன் என அவன் தெரிவிக்கின்றான்.

அவர்கள் தங்கள் கல்வியை பூர்த்தி செய்து தொழில்பெற்று பொருளாதார ரீதியில் சுதந்திரமானவர்களாக விளங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன் என அவன் குறிப்பிடுகின்றான்.

கடந்த வருடம் அந்த குடும்பத்தை துன்பம் தாக்கியது.முதலாவது அலையின் போது 40வயது லொகிந்தர் மலிக் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
அவர் பி;ள்ளைகளை தாயின் பொறுப்பில் விட்டுவிட்டு உயிரிழந்தார்.
இந்த வருடம் இரண்டாவது அலையின் போது சாவித்திரி தேவியும். பாதிக்கப்பட்டார்.

 கடும் காய்;ச்சலால் பாதிக்கப்பட்ட அவரை காப்பாற்றுவதற்கு உள்ளுர் மருத்துவர்கள் தங்களால் முயன்ற அனைத்தையும் செய்தனர்.
பின்னர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட அவரது நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது மூன்று நாட்களின் பின்னர் அவர் உயிரிழந்தார்.

நான் எனது பெற்றோர்களின் நினைவில் வாழ்கின்றேன் என்கின்றார் 12 வயது பிராச்சி ,நான் வாழ்க்கையில் எதனையாவது சாதிப்பதன் மூலம் அவர்களை நினைவுகூற விரும்புகின்றேன் நான் மருத்துவராக விரும்புகின்றேன் என அவர் தெரிவிக்கின்றார்.கொவிட் அனாதைகள் மலி;க்கின் பிள்ளைகள் மாத்திரம் கொவிட்டினால் தங்கள் பெற்றோர்களை இழந்தவர்கள் இல்லை.

இந்தியாவில் 3621 குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்துள்ளன  சிறுவர் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
அவர்கள் கொவிட்அனாதைகள் என அழைக்கப்படுகின்றனர்.
பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 30.071.

சிறுவர்களிற்கு நிதி உதவியை வழங்குவதில் உள்ள பிரச்சினைகள்
உறுதியான புள்ளிவிபரங்கள் இ;ல்லாததால் பல சிறுவர்கள் அரசாங்கத்திடமிருந்து தங்களிற்கு கிடைக்கவேண்டிய உதவிகளை தவறவிடக்கூடும் என்ற கவலை காணப்படுகின்றது.

தங்கள் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் அல்லது அவர்களின் சட்டபூர்வமாக பாதுகாவலர் குறிப்பிட்ட நிதி உதவிக்கு உரித்தானவர் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ஒரு மில்லியன் ரூபாய் குறிப்பிட்ட பிள்ளைகளிற்கு 18 வயதான பின்னர் தவணை முறையிலும் 23 வயதான பின்னர் முழுமையாகவும் கிடைக்கும் .
ஹிமாசு குடும்பத்தினரை  அதிகாரிகள் சந்தித்தவேளை அவர்கள் ஹிமாசுவிற்கும் சகோதரங்களிற்கும் உதவிகளை வழங்குவதாக பதிவு செய்து சென்றனர்.

ஆனால் இதுவரை உதவிகள் கிடைக்கவில்லை.அவர்களது உறவினரான ராஜூ தனது காணியில் விளைந்தவற்றை பயன்படுத்தி குடும்பத்தை பராமரித்து வருகின்றார்.பெற்றோர் இல்லாத பிள்ளைகளை வளர்ப்பது மிகவும் கஸ்டம் என்கின்றார் அவர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post