சிறுவர் துஸ்பிரயோக குற்றவாளிகள் எவருடனும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
சிறுவர் கடத்தல் சிறுவர்களை தொழிலிற்கு அமர்த்தியவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்கள் என குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுடன் தங்கள் கட்சியால் இணைந்து செயற்படமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களிற்கு எதிரான அனைத்து வகையான துஸ்பிரயோகங்களையும் கண்டிப்பதே தனது கட்சியின் கொள்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஒரு அரசியல் கட்சி நாங்கள் ரிசாத்பதியுதீனின் அரசியல் கட்சி உட்பட பல கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றோம்,நாங்கள் பல விடயங்கள் தொடர்பில் அவர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளோம்,
ஏனைய கட்சிகள் குறித்து பல விடயங்கள் இருக்கலாம்,சில விடயங்கள் குறித்த அந்த கட்சிகளிற்கு என கொள்கைகள் இருக்கலாம், ஆனால் எங்கள் கட்சியின் கொள்கைகளை அவர்கள் மீறினால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது என எரான் விக்கிரமரட்;ண தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்த விவகாரத்திற்கு நீதிமன்றத்தில நிரூபிக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களை அவர்களின் பதவிகளை கருத்தில் எடுக்காமல் தண்டிக்கவேண்டும் எனவும் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

Post a Comment