லஞ்ச ஊழல் வழக்கில் இருந்து நிஸங்க சேனாதிபதி, பாலித இருவரும் விடுதலை - Yarl Voice லஞ்ச ஊழல் வழக்கில் இருந்து நிஸங்க சேனாதிபதி, பாலித இருவரும் விடுதலை - Yarl Voice

லஞ்ச ஊழல் வழக்கில் இருந்து நிஸங்க சேனாதிபதி, பாலித இருவரும் விடுதலைஅவன்காட்  நிறுவன தலைவர் நிஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் பாலித்த பெனாண்டோ ஆகியோர் லஞ்ச ஊழல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
355 இலட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக வழங்கியமை மற்றும் பெற்றமை தொடர்பில் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீளப் பெறுவதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்ததை சட்டத்தரணி மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரத்தை வைத்துக் கொண்டு இந்த மனுவை மீளப்பெறுவதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் தனக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் ஆஜரான உதவி பணிப்பாளர் நாயகம் துசாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரையும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது

0/Post a Comment/Comments

Previous Post Next Post