மல்லாவியில் கிணற்றில் விழுந்து இளம் தம்பதியர் உயிரிழப்பு - Yarl Voice மல்லாவியில் கிணற்றில் விழுந்து இளம் தம்பதியர் உயிரிழப்பு - Yarl Voice

மல்லாவியில் கிணற்றில் விழுந்து இளம் தம்பதியர் உயிரிழப்புமுல்லைத்தீவு மல்லாவிப் பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ரஞ்சன் பிரதீபன்(31), பிரதீபன் மாலினி (27) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

குறித்த தம்பதியர் நேற்று மாலை 7 மணியளவில் கிணற்றில் விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர்கள் தற்கொலை நோக்கில் கிணற்றில் பாய்ந்தார்களா அல்லது ஏதேனும் குற்றச்செயல்களா என்பது இதுவரை உறுதியாகவில்லை எனக் கூறப்படுகின்றது.

திருமணத்துக்கு முன்னர் பிரதேச வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றியபோது இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

மேலும் திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post