கொரோனா தடுப்பூசி எங்களுக்கும் வழங்குக! தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை - Yarl Voice கொரோனா தடுப்பூசி எங்களுக்கும் வழங்குக! தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை - Yarl Voice

கொரோனா தடுப்பூசி எங்களுக்கும் வழங்குக! தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கைகொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்கும் விரைவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி 
வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலைமையில் 
சிறைச்சாலைக்குள் முறையான சுகாதார வழிமுறைகள் இல்லை எனவும், தம்மில் பலர் வயதான வர்கள் என்பதுடன் சுகவீன முற்று இருக்கின்றனர் எனவும் புதிய மகசின் சிறைச் சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 46 பேர் தற்போது கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள நிலையில், அவர்களில் சிலர் 60 வயதைக் கடந்தும், சுகவீனமுற்றும் உள்ளனர் எனத் தெரியவருகின்றது.

தாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்குமாறு பல தடவைகள் வலியுறுத்திய போதும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் சுகாதார வசதிகள் குறைவாக உள்ளன எனவும், கைதிகள் சிலருக்குக் கொரோனாத் தொற்று உறு 
திப்படுத்தப்பட்ட பின்னரும், அவர்களை முறையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தமிழ் அரசியல் கைதிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

பொது மன்னிப்பின் கீழ் 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப் பட்டமைக்காக ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துள்ள அவர்கள், அதே கரிசனையை தம் மீதும் காட்டுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post