கர்ப்பிணி தாய்மார்களுக்கு பைசர், மொடர்னா தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு - குடும்ப சுகாதார பணியகம் கோரிக்கை - Yarl Voice கர்ப்பிணி தாய்மார்களுக்கு பைசர், மொடர்னா தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு - குடும்ப சுகாதார பணியகம் கோரிக்கை - Yarl Voice

கர்ப்பிணி தாய்மார்களுக்கு பைசர், மொடர்னா தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு - குடும்ப சுகாதார பணியகம் கோரிக்கைகர்ப்பிணி தாய்மார்களுக்கு பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆராய்ந்து பார்க் குமாறு குடும்ப சுகாதார பணியகம் சுகாதார அமைச்சுக் குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுவரை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சினோபாம் தடுப்பூசி மாத்திரம் செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பிரதிப் பணிப்பாளர் சித்திர மாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக இதுவரை 13 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாகவும், 2 ஆயிரத்து 250 கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த கர்ப்பிணி தாய்மார்களில் 175 பேர் மாத் திரம் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக விசேட வைத்தியர் சித்திர மாலி டி சில்வா தெரி வித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post