சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் - சாணக்கியன் - Yarl Voice சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் - சாணக்கியன் - Yarl Voice

சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் - சாணக்கியன்


 

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது முகநூல் பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இறந்த பச்சிளம் சிறுமிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் இச் செய்தியை கேள்விப்பட்டதும் எனது இதயம் ஓர் சில மணிநேரம் கனத்தது ஒடித்திரிந்து கல்வி கற்கும் வயதில் குடும்ப சுமையை தன்னுள் தாங்கிய இச் சிறுமியை நினைத்து. இச் சிறுமியின் மரணத்தில் நீதி கிடைக்கும் என நம்புகின்றேன்.

 சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன்இ சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும். எனது குரல் வட கிழக்குக்கு மட்டுமல்ல மலையகம் மற்றும் எமது இனம் இலங்கையில் இங்கெல்லாம் இன்னல் படுகின்றதே அங்கெல்லாம் அவ் மக்களுக்காக ஒலிக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுப் பணிப்பெண்ணாக தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையிலேயே நான் இதுகுறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளயிட்டு இருந்தேன்இ “15 வயதான குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறிப்பட வேண்டும்.

 சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும். நீதிக்கு மேல் எவரும் இல்லை. இந்த விடயத்தில் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.
இதேபோன்று நாட்டில் எத்தனையோ விடயங்கள் எங்களுக்கு தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது. 

முன்னாள் அமைச்சரும்இ தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுடீனின் வீட்டில் இந்த விடயம் நடைபெற்றுள்ளமையினாலேயே வெளியில் தெரியவந்துள்ளது.
எனினும்இ எங்களுக்கு தெரியாமல் எங்கெங்கோ எல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் தினந்தினம் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது.

 அத்துடன்இ சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கும்இ பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படுவதாக தினமும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது.

 இவ்வாறான செயற்பாடுகளை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் விரைந்து முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவும் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவரினாலும் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என நான் நம்புகின்றேன்.

குறித்த அதிகார சபைக்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இதன்காரணமாக அவர்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
சிறுவர்களின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதுடன்இ அவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்றனர். 

இவ்வாறு அவர்கள் தங்களது இளம் வயதிலேயே பணிக்கு அமர்த்தப்படுகின்றமை காரணமாகவே இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகங்கொடுகின்றனர். எனவே முதலில் முகவர்கள் ஊடாக சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். 

சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றேன்.

அத்துடன்இ சிறுவர்களின் கற்றல் நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு அவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post