ஆப்கான் தூதுவரின் மகளை இனந்தெரியாதவர்கள் கடத்தி சித்திரவதை – பாக்கிஸ்தானில் சம்பவம் - Yarl Voice ஆப்கான் தூதுவரின் மகளை இனந்தெரியாதவர்கள் கடத்தி சித்திரவதை – பாக்கிஸ்தானில் சம்பவம் - Yarl Voice

ஆப்கான் தூதுவரின் மகளை இனந்தெரியாதவர்கள் கடத்தி சித்திரவதை – பாக்கிஸ்தானில் சம்பவம்பாக்கிஸ்தானிற்கான ஆப்கான் தூதுவரின் மகளை கடத்திய  இனந்தெரியாதநபர்கள் அவரை பின்னர்  காயங்களுடன் விடுதலை செய்துள்ளனர்.
ஆப்கான் தூதுவர் நஜீப் அலிகில்லின் மகள் சிசிலா அலிகில் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தவேளை வெள்ளிக்கிழமை இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு மோசமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என ஆப்கானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர் அவர் தற்போது மருத்துவகிசிச்சை பெற்றுவருகின்றார் என தெரிவித்துள்ள ஆப்கான் வெளிவிவகார அமைச்சு பாக்கிஸ்தான் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் ஆப்கான் தூதரக பணியாளர்கள் இராஜதந்திரிகளிற்கான பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

கைகள் கால்களில் வீக்கங்கள் கயிறுஅடையாளங்களுடன் தூதுவரின் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

26 வயதான தூதுவரின் மகள் ஐந்து மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post