அமெரிக்கா சீனா உறவை மேம்படுத்த இருநாடுகளும் முயற்சி ! சீனா தூதுவர் - Yarl Voice அமெரிக்கா சீனா உறவை மேம்படுத்த இருநாடுகளும் முயற்சி ! சீனா தூதுவர் - Yarl Voice

அமெரிக்கா சீனா உறவை மேம்படுத்த இருநாடுகளும் முயற்சி ! சீனா தூதுவர்

 

அமெரிக்காவுடனான உறவு முறிவடைந்த நிலையில் அவற்றை சீர்செய்யும் வகையில் சீனாவின்  தூதுவர் வாஷின்டோனில் நேற்று அமெரிக்க அதிகாரிகளை சந்தித்தார். சீனா தூதுவர் குயின் கங் கோவிட் 19 பேரிடரை வெற்றிகொண்டமைக்காக அமெரிக்காவுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். 

கடந்த செய்வாய்க்கிழமை வடக்கு சீனா நகரமான தியான்ஜினில் அமெரிக்கா பிரதி வெளியுறவுத்துறை செயலர் வென்டி சேர்மனுடன் சீனாவின் உயர் மட்ட ராயதந்திரிகள் நிகழ்த்திய பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கும் இடையிலான ராயதந்திர உறவை முன்னேற்ற முயற்சி எடுக்க உடன்பட்டதை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

55 வயதான சீனாவின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கங் 8 வருட காலமாக அமெரிக்கா தூதுவராக இருந்த 68 வயதான சுய் தியங்காய்க்கு பதிலாக நியமிக்கப்பட்டுளார்.   

அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான உறவின் வாசல் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாகவும் இனிமேல் அதை மூடமுடியாது என்றும் அமெரிக்கா தலைநகரில் உள்ள அவரது தூதரக இல்லத்தில் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post