தபால் அலுவலகத்துக்கென புதிதாக கட்டப்பட்ட நிலையத்தை திறந்து வைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை - Yarl Voice தபால் அலுவலகத்துக்கென புதிதாக கட்டப்பட்ட நிலையத்தை திறந்து வைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை - Yarl Voice

தபால் அலுவலகத்துக்கென புதிதாக கட்டப்பட்ட நிலையத்தை திறந்து வைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை
யாழ்.சங்கானையில் தபால் அலுவலகத்துக்கென புதிதாக கட்டப்பட்ட நிலையத்தை திறந்து வைக்குமாறு  பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சங்கானையில் தபால் அலுவலகம் வாடகை வீட்டில் இயங்கி வருவதால் நிலையான கட்டடத்திற்கென மக்களின் பங்களிப்பில் காணி வாங்கப்பட்டு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு இருந்த போதும் இரு வருடங்கள் கடந்த நிலையிலும் கட்டடத்தை திறப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் முன் வருகினம் இல்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

2006 ஆம் ஆண்டு இந்த கட்டத்திற்கு மக்களால் காணி அன்பளிப்பு செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு வருடத்தில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த கட்டடத்தில் தளபாடங்கள் போடப்பட வேண்டும். சுற்றிவர மதில் கட்டப்பட வேண்டும். கட்டடத்திற்கு முன்னே கூரை அமைக்கப்பட வேண்டிய பல வேலைகள் இருக்கின்றன. இந்த உதவியை ஆவது சம்பந்தப்பட்ட துறையினர் நிவர்த்தி செய்து கட்டடத்தை திறக்குமாறு கோரி நிற்கின்றனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post