கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க சென்ற கஜேந்திரகுமாரை தடுத்த இராணுவம் - தடைகளை மீறி உதவி வழங்கி வைப்பு - Yarl Voice கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க சென்ற கஜேந்திரகுமாரை தடுத்த இராணுவம் - தடைகளை மீறி உதவி வழங்கி வைப்பு - Yarl Voice

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க சென்ற கஜேந்திரகுமாரை தடுத்த இராணுவம் - தடைகளை மீறி உதவி வழங்கி வைப்புபருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கிராம்ம் கொவிட் முடக்கத்திற்குள்ளான மக்களுக்கான நிவாரணப் பணியினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்டிருந்தனர். 

இவ் நிவாரணப் பணியானது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது இராணுவத்தினருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் கடுமையான வாக்கு வாதம் ஏற்ப்பட்டிருந்தது. 

இராணுவம் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புக் கடவையில் வைத்தே முடக்கத்தில் உள்ள மக்களுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்குவது வழமை. இக் கடவையில் வைத்தே உலருணவுப் பொருட்கள் சுகாதார விதிமுறைக்கமையவே இடம்பெற்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post