சுகாதார கட்டுப்பாடுகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் - யாழ் போதனா பிரதி பணிப்பாளர் - Yarl Voice சுகாதார கட்டுப்பாடுகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் - யாழ் போதனா பிரதி பணிப்பாளர் - Yarl Voice

சுகாதார கட்டுப்பாடுகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் - யாழ் போதனா பிரதி பணிப்பாளர்சுகாதார கட்டுப்பாடுகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என யாழ் போதனா பிரதி பணிப்பாளர் மருத்துவர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தல்
கோவிட் திரிபு பரம்பலைக் கட்டுப்படுத்த தற்போதைய சூழலில் கோவிட் நோய் தொடர்பான விழிப்புணர்வினை மேற்கொள்ளும் செயல்பாடுகளை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படல் வேண்டும். 

பொது இடங்களில் சமூக இடைவெளி பேணல் இரட்டிப்பாக அதிகரிக்கப்படல் வேண்டும். பொது இடங்களில் தொடுகையில் அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கைகழுவல் வேண்டும்.

வேலைத்தளங்கள், வியாபார நிலையங்களில் தள மேற்பரப்புகளை கிருமி நீக்கி கொண்டு சுத்தம் செய்தலை 
இரட்டிப்பாக்க வேண்டும். பொது மக்களிற்கு கோவிட் தடுப்பு மருந்து ஏற்றும் செயற்றிட்டத்தை 
இரட்டிப்பாக அதிகரிக்க வேண்டும். 
முகக்கவசமணிதலை முறையாக கடைப்பிடித்தல் வேண்டும். 

முகக்கவசம் அணிதல் நேரத்தினை இரட்டிப்பாக்குதல் வேண்டும். இவ்வாறு சுகாதார மேம்பாடுகளை தற்போதைய சூழலில் இரட்டிப்பாக்க அதிகரிக்கும் போது நோய் தொற்றுவீதம் குறைக்கப்பட்டு நோய் பரம்பல் 
கட்டுப்படுத்தப்படும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post