31ம்திகதி வரை பொதுமக்கள் பின்பற்றவேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் - வெளியிட்டது சுகாதார அமைச்சு - Yarl Voice 31ம்திகதி வரை பொதுமக்கள் பின்பற்றவேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் - வெளியிட்டது சுகாதார அமைச்சு - Yarl Voice

31ம்திகதி வரை பொதுமக்கள் பின்பற்றவேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் - வெளியிட்டது சுகாதார அமைச்சுஆகஸ்ட் 31 ம் திகதி வரை  பொதுமக்கள் பின்பற்றவேண்டிய  புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

வணிக வளாகங்கள் மூடப்படும் என அறிவித்துள்ள சுகாதார அமைச்சு அத்தியாவசிய தேவை தவிர்ந்த   வேறு நோக்கங்களிற்காக வீட்டிலிருந்து ஒருவரே வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்  என தெரிவித்துள்ளது.

பொதுப்போக்குவரத்தில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் தனியார் அலுவலகங்கள் ஆகக்குறைந்தளவு  ஊழியர்களுடன் செயற்படலாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் பல்கலைகழகங்கள் மேலதிக வகுப்புகளிற்கு அனுமதியில்லை திருமண நிகழ்வுகளிற்கும் அனுமதியில்லை எனவும்சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post