கிளினிக் மருந்துகளை மீண்டும் தபாலில் வழங்க நடவடிக்கை - Yarl Voice கிளினிக் மருந்துகளை மீண்டும் தபாலில் வழங்க நடவடிக்கை - Yarl Voice

கிளினிக் மருந்துகளை மீண்டும் தபாலில் வழங்க நடவடிக்கை
அரசாங்க மருத்துவமனைகளின் கிளினிக்குகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தபால் மூலம் தேவையான மருந்துகளை வழங்குவதற்கான  கூட்டுத் திட்டத்தை சுகாதார அமைச்சும் அஞ்சல் திணைக்களமும் மீண்டும் தொடங்கியுள்ளன.

மருந்துகள் தேவைப்படும் நோயாளிகள் கிளினிக் செல்லும் மருத்துவமனைக்கு அழைத்து தேவையான தகவல்களை வழங்கி மருந்துகளை வீட்டுக்குப் பெறலாம் என்று சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் சம்பிக்க விக்கிரமசிங்க நேற்று (25) தெரிவித்தார்.

அழைப்பு மூலம் வழங்கப்பட்ட தகவல்களின்படி, நோயாளிகளின் வீடுகளுக்கு மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

சிங்கள மொழியில் 072 0720720 மற்றும் தமிழில் 072 0606060 என்ற தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதிப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

கொவிட் முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது, ​​சுகாதார அமைச்சு அஞ்சல் திணைக் களத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயற்படுத்தியது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post