ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் நினைவேந்தல் - Yarl Voice ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் நினைவேந்தல் - Yarl Voice

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் நினைவேந்தல்


 

ஆயுததாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் முன்னெடுக்கப்பட்டன.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி, சுடரேற்றப்பட்டது.

யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவராக இருந்தவர் சகாதேவன் நிலக்சன்.

2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை, அவரது வீட்டிற்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post