காபுலில் வியாழக்கிழமை இடம்பெற்ற தாக்குதலிற்கு காரணமானவர்களை அமெரிக்கா தேடிக் கண்டுபிடிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
கொரசன் பிராந்தியத்திலுள்ள ஐஎஸ் என்ற அமைப்பே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஜோ பைடன் உறுதி செய்துள்ளார். வியாழக்கிழமை தாக்குதலில் 13 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
2011 இல் ஹெலிக்கொப்டர் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டதில் 30 படையினர் கொல்லப்பட்டதன் பின்னர் அதிகளவான அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்ட சம்பவம் இதுவென கருதப்படுகின்றது.
இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்களும்- அமெரிக்காவிற்கு பாதிப்பை ஏற்படுத்த விரும்புபவர்களும் இதனை தெரிந்துகொள்ள வேண்டும், நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம் மறக்க மாட்டோம் என பைடன் தெரிவித்துள்ளார்.
நாங்கள் உங்களைத் தேடி வேட்டையாடுவோம்- நீங்கள் இதற்கான விலையைச் செலுத்தும்படி செய்வோம், நான் எனது மக்களின் நலனை பாதுகாப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment