இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 1500 கிலோ மஞ்சல் பாசையூரில் மீட்பு - Yarl Voice இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 1500 கிலோ மஞ்சல் பாசையூரில் மீட்பு - Yarl Voice

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 1500 கிலோ மஞ்சல் பாசையூரில் மீட்பு




யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில்  
ஆயிரத்து 500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப் பொதி செய்யப்பட்டு அவை கடத்திவரபட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று காலை இந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டன.

மஞ்சளை கடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் பாசையூரைச் சேர்ந்த 64 மற்றும் 32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் சுங்கதிணைக்கள அதிகாரிகளில்  
அந்த மஞ்சள் பொதிகள் ஒப்படைக்கபடவுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post