சிறைக் கைதிகளுக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தத் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் சினோபாம் முதலாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகளுக்கு சினோபாம் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள 2,067 கைதி களுக்கும், பெண்கள் பிரிவிலுள்ள 369 கைதிகளுக்கும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலுள்ள 964 கைதிகளுக்கும், புதிய மகசின் சிறைச்சாலையிலுள்ள 694 கைதிகளுக்கும் இன்று சுகாதார வழிகாட்டுதல்களின்படி தடுப்பூசி செலுத்தத் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment