இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஐயாவின் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்., கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.
இதன்போது இலங்கையில் தமிழர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் சமகால அரசியல் தொடர்பாகவும் பேசப்பட்டது.
Post a Comment