கொரோகொரோனாப் பேரிடர் காரணமாகத் தொழில் வாய்ப்பிழந்த குடும்பங்களிலும், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிலும் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. இத்தகைய குடும்பங்களை அடையாளங்கண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் பணியைத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக நேற்று செவ்வாய்க்கிழமை (07.09.2021) கிளிநொச்சி மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பளை, பரந்தன், பிரமந்தனாறு, தருமபுரம், கனகாம்பிகைக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 250 குடும்பங்களுக்கு இப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனாப் பெருந்தொற்று கடந்த ஆண்டு ஆரம்பித்த காலப் பகுதியில் இருந்து தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இப்பணியைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.இதற்கு உறுதுணையாக இருக்கும் நன்கொடையாளர்களுக்குக் கோடி புண்ணியம்.
நாங்கள் தொடர்புகொள்ளும்போது முகம் கோணாது உதவிசெய்யும் அன்புள்ளங்களுக்கும் , கேட்காமலேயே தாமாக முன்வந்து உதவிசெய்யும் தொண்டு உள்ளங்களுக்கும் இயற்கை என்ற பேரிறைவனின் ஆசீர்வாதம் எப்போதும் கிடைப்பதாக.
Post a Comment