ஈரான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த அமெரிக்காவின் பெல் 214 ஹெலிகாப்டர், அந்நாட்டு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க சென்னையில் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையில் அமலாக்கத் துறையினர் பல அதிர்ச்சி தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர். பாங்காக்கை சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான பெல் 214 ஹெலிகாப்டர், சென்னை வழியாக ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்தது.
இந்த ஹெலிகாப்டர் ஈரானுக்குச் செல்வதைத் தடுக்குமாறு அமெரிக்க அரசிடம் இருந்து இந்தியாவுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அமெரிக்கா ஹெலிகாப்டர் இதுபோன்ற பரஸ்பர உதவி நடவடிக்கைகளை எடுக்க ஏற்கனவே அமெரிக்காவும் இந்தியாவும் ஏற்கனவே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதனால் அமெரிக்கக் கோரிக்கையை ஏற்று, சென்னையில் இந்த ஹெலிகாப்டர் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் பாங்காக்கை சேர்ந்த மரிலாக் ஏவியோன் சர்வீசஸ் கோ லிமிடெட் அப்துல்லா மற்றும் ஹமீத் இப்ராஹிம் ஆகியோருக்குச் சொந்தமானது ஆகும். என்ன திட்டம் இவர்கள் இந்த ஹெலிகாப்டரை சென்னையில் வழியாக ஈரான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டிருந்தனர். அமெரிக்க அரசு ஈரானுக்கு தங்கள் ஹெலிகாப்டர்களை ஏற்றுமதி செய்ய மறுத்ததால், சென்னை வழியே ஏற்றுமதி செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஹெலிகாப்டர் முழு பறக்கும் நிலையில் இல்லாமல் தனித்தனி பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. இதன் மூலம் எளிதாக இதை ஈரானுக்கு அனுப்பலாம் அவர்கள் எண்ணியிருந்தனர். கொரோனா பாதிப்பு இருப்பினும், திடீரென ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக ஹெலிகாப்டரை ஈரானுக்கு அனுப்ப முடியவில்லை, இதனால் ஹெலிகாப்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள, "ஜே மாடடீ வர்த்தகக் கிடங்கு மண்டலத்தில் (FTWZ) வைக்கப்பட்டது. தங்கள் ராணுவ ஹெலிகாப்டர்களில் ஒன்று சென்னை வழியே ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதைக் கண்டறிந்த அமெரிக்கா, இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது.
தங்கள் ராணுவ ஹெலிகாப்டர் ஈரான் நாட்டிற்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், அமெரிக்க நீதிமன்றம் இந்த ஹெலிகாப்டரை பிடிக்க வாரண்ட் பிறப்பித்தது. இந்த வாரண்டை செயல்படுத்த இந்தியா உதவ வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று, ஜே மாடடீ வர்த்தகக் கிடங்கு மண்டலத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த ஹெலிகாப்டரை அமலாக்க துறையினர் சிறைபிடித்தனர்.
தாய்லாந்து வழியாக அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து இந்த ஹெலிகாப்டரை பாங்காக்கை சேர்ந்த மரிலாக் ஏவியோன் சர்வீசஸ் கோ லிமிடெட் நிறுவனம் வாங்கியுள்ளது. அது தாய்லாந்து வழியாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதும் கடந்த 2 ஆண்டுகளாக அது ஜே மாடடீ வர்த்தகக் கிடங்கில் மாதாந்திர வாடகை அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளதையும் அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்தனர். பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ், இந்த ஹெலிகாப்டர் அல்லது அதன் உதிரிப் பாகங்கள் ஜே மாடடீ வர்த்தகக் கிடங்கு மண்டலத்தில் இருந்து வெளியே போகக் கூடாது என்று அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஹெலிகாப்டர் முழு பறக்கும் நிலையில் இல்லாமல் எளிதாக ஏற்றுமதி செய்யும் வகையில் பிரித்து பாகங்களான நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், "எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை. இதனால் இறக்குமதி செய்தவர்களை நாங்கள் கைது செய்யவில்லை. இருப்பினும், ஹெலிகாப்டரை இங்கு வைத்திருக்க இதன் உரிமையாளர்களுக்குச் சென்னையில் உடந்தையாக இருந்தவர்கள் குறித்த விவகாரங்களை அமலாக்கத்துறை சேகரித்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
Post a Comment