கடல் சீற்றம் அதிகரிக்கும்” - யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Yarl Voice கடல் சீற்றம் அதிகரிக்கும்” - யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Yarl Voice

கடல் சீற்றம் அதிகரிக்கும்” - யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை




எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என்றும் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளது.

 அந்த வகையிலே யாழ்ப்பாண மாவட்டத்திலே மழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் 6ஆம் திகதி 33.5 சதவீத மழை தான் யாழ்ப்பாண மாவட்டத்திலே பெய்துள்ளது.

இருந்த போதிலும் ஏனைய மாவட்டங்களிலே இந்த மழைவீழ்ச்சி சற்று அதிகமாக இருந்ததுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.யாழில் அவ்வாறான வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலைமை இன்னும் ஏற்படவில்லை.

இருந்தபோதும் எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள், இலங்கையின் தென்கிழக்குப் பக்கத்திலே ஏற்பட்டிருக்கின்ற தாழமுக்க நிலையானது மேலும் வலுப்பெற்று நகரும்போது யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் அந்த மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய சாத்தியமுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எமக்கு அறிவித்துள்ளது.

 அதன் அடிப்படையிலே கடல் சீற்றம் சற்று அதிகமாக இருக்கக்கூடிய நிலை உள்ளது. ஆகவே கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனக் கூறுகின்றோம் - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post