தற்போதைய சூழ்நிலையில் எவரும் தனித்து அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது- சிறிசேன - Yarl Voice தற்போதைய சூழ்நிலையில் எவரும் தனித்து அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது- சிறிசேன - Yarl Voice

தற்போதைய சூழ்நிலையில் எவரும் தனித்து அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது- சிறிசேனதற்போதைய சூழ்நிலையில் எவரும் தனித்து அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீனாவின் உரக்கப்பல் தொடர்பிலான இலங்கை நிபுணர்களின் கருத்தினை  அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி இது எனது கருத்து அரசாங்கம் நிபுணர்களின் கருத்திற்கு ஏற்ப செயற்படவேண்டு;ம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் செய்ததை போல பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்,அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்லவில்லை என அவர் தெரிவித்துள்ளார் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை குற்றம்சாட்டாவிட்டால் அனைத்திற்கும் அமைதியான முடிவை  காணமுடியும் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post