குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்: கெமுனு விஜேரத்ன - Yarl Voice குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்: கெமுனு விஜேரத்ன - Yarl Voice

குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்: கெமுனு விஜேரத்னஎரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தை அதிகரிப்பது அத்தியாவசியமானது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25 ரூபாவாக அதிகரிக்க வேண்டும். எவ்வாறாயினும், பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு ஒன்றிய உறுப்பினர்கள் இன்று பிற்பகல் கூடுகின்றனர் என சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித் தார்.

அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது நாடு எதிர்கொண்ட நிலைமையைக் கருத்திற் கொண்டு பஸ் கட்டணத்தை அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணத்தை அதிகரிக்காமல் துறையை மேம் படுத்த பல முன்மொழிவுகளை அவர்கள் சமர்ப்பித்த போதிலும் துரதிர்ஷ்டவசமாக அந்த முன்மொழிவுகளை செயற்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கை களை எடுக்கவில்லை.

உதிரிப் பாகங்கள் மற்றும் பல சேவைகள் 300% அதிகரித்துள்ளதால், தனியார் பஸ் உரிமையாளர்களால் பஸ் சேவையை இயக்க முடியாத நிலை உள்ளது.

இவ்விடயத்தில் அரசாங்கத்தின் தலையீட்டை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டணத்தை அதிகரிப்பது பொது மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என்பதால் தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பஸ் கட்டண அதிகரிப்பு வெறும் மாற்று யோசனையே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post